தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

SHARE

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்கிற தர வரிசையில் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கங்கள் பொதுவாக வழங்கப்படுகின்றன.

ஆரம்பகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு, ஆலிவ் மரத்தில் இருந்து எடுத்த ஆலிவ் கிளைகளை மாலையாக மாற்றி அதை பரிசாக வழங்கினர்.  

பின்னர், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் கொடுக்கும் வழக்கம் 1896 ஆண்டில் நடைபெற்ற நவீன ஒலிம்பிக் போட்டிகளில் தான் தொடங்கப்பட்டது, அதிலும் வெள்ளியால் ஆன பதக்கங்களை மட்டும்தான் தொடக்கத்தில் வழங்கினர்.  

பின்னர் 1904ல், அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தான் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. 

ஒலிம்பிக் போட்டிகளில் கொடுக்கப்படும் பதக்கங்களை வடிவமைப்பது நேஷ்னல் ஒலிம்பிக் கமிட்டியின் பொறுப்பாகும். 

முதல் பரிசாக வழங்கப்படும் தங்க பதக்கம், வட்ட வடிவில், ரிப்பனுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த பதக்கத்தின் விட்டம் 85 மில்லிமீட்டரிலும், தடிமன் 12 மில்லிமீட்டர் அளவிலும் இருக்கும்.  இதன் எடை 556 கிராம். 

தங்கப் பதக்கம் என்பதால் இது முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது இல்லை என்பது தான் உண்மை. அதாவது தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமே இது!. 92.5% வெள்ளியில் 6 கிராம் வரை தங்க முலாம் பூசப்பட்டது.

இரண்டாம் பரிசாக வழங்கப்படும் வெள்ளி பதக்கம், 550 கிராம் எடையுள்ள தூய வெள்ளியால் ஆனது.  

மூன்றாம் பரிசாக வழங்கபடும் வெண்கல பதக்கம், 450 கிராம் எடை கொண்டது, இது 95% தாமிரமும், 5 % துத்தநாகமும் கலக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது.

ஆனால், 1904 ஆண்டில் இருந்து 1912 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கொடுக்கப்பட்ட தங்கப் பதக்கங்கள் திடமான முழுத் தங்கத்தால் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  

தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் எப்போதும் ஒரே மாதிரியாக தான் வடிவமைக்கின்றனர். பதக்கத்தின் மேல் பக்கத்தில், பனதினைகோஸ் ஸ்டேடியத்தின் முன் நிற்கும் வெற்றியின் கிரேக்க தெய்வமான நைக் கின் உருவமும், ஒலிம்பிக் போட்டியின் பெயர் அதாவது தற்ப்போது Games of the XXXII Olympiad Tokyo 2020, மற்றும் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வட்ட வடிவ வளைவுள்ள சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஜப்பான் அரசு இந்த முறை ஒலிம்பிக் போட்டியின் பதக்கங்களுக்கான உலோகங்களை மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உருவாக்கியது என்பது குறிப்பிடத் தக்கது. மறு சுழற்சி குறித்த விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்காக ஜப்பான் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த உலோகக் கழிவுப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்களை வழங்கினர்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கொரோனாவை வென்ற இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் 44 பேர் மரணம்!

Leave a Comment