கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

SHARE

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் நடந்த திருமண புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்திய அணியின் நம்பிக்கைக்கு உரிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, கடந்த டி 20 தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார்.

அந்நேரத்தில் பும்ரா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல மலையாள நடிகை ஒருவரே பும்ராவின் வருங்கால மனைவி என்றும் பல வித செய்திகள் பரவின. சமீபத்தில், மார்ச் 15ஆம் தேதியன்று பும்ராவுக்கு கோவாவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், ஆனால் மணப் பெண் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் என்றும் மீண்டும் செய்திகள் பரவின. 

இவற்றில் எது உண்மை எது பொய்? – என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், தனக்கும் சஞ்சனா கணேசனுக்கும் திருமணம் நடந்த புகைப்படங்களை பும்ரா இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

பும்ரா – சஞ்சனா தம்பதிகளுக்கு பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 28 வயதாகும் கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளரானா சஞ்சனா கணேசனின் குடும்பத்தினர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் சஞ்சனா நெடுங்காலமாகத் தனது தந்தை கணேசன் ராமசாமி மற்றும் குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலம் புனேவில்தான் வசித்து வருகிறார்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்… எஸ்பிஐ அறிவிப்பால் அதிருப்தி…

Admin

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

Leave a Comment