ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

SHARE

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டித் தொடர் இந்தாண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கொரோனா கட்டுப்பாட்டு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விடுதி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடதப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

இதனையடுத்து முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில்ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

Leave a Comment