‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

SHARE

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை இரண்டாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய வருமானவரித்துறை போர்ட்டல் இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து பயனாளர்களுக்கு சிக்கல் நிலவி வந்தது.

குறிப்பாக வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித்துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் 2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் இடையே நடந்த கூட்டத்தில் புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தீர்க்கப்படும் என இன்போசிஸ் உறுதியளித்தது.

இந்த கால நீட்டிப்பு வரி செலுத்துவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் மத்திய அரசு 2020-2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

Leave a Comment