2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

SHARE

பதிவாளர் தங்கவேலு மீது எந்த ந்டவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து பல்கலிகக்ழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருந்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்தினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று

பின்னணி என்ன?

‘பியூட்டர் பவுண்டேஷன்’ என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் பிறப்பித்திருந்தார்.

இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தங்கவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தப்பட இருந்தது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Admin

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

“நான் ராஜினாமா பண்ற மாதிரி கனவு தான் கண்டேன்” – பின்வாங்கிய பாஜக எம்.பி.

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

Leave a Comment