ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

SHARE

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் கொண்டாடத்தில் ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரசிகர்களை கண்டிக்காத நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனிடையே தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் மோஷன் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதத்தில் ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும், அவரது ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வனங்களின் காவலன் .. கம்பீரத்தின் அடையாளம் ஆனால் இன்று?

Admin

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை கூட்டம்..!!

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

Leave a Comment