ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பரபரப்பு சம்பவம் அரேங்கேறியுள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டத்தின்போது, ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.அப்போது திடீரென ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் பேசுபொருளானது

இந்த சூழ்நிலையில் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான காரணத்தை கூறிய ஜெர்மனி அணி கூறியுள்ளது.

அதாவது ,தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஒலிம்பிக் நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வலுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனையுடன் ஜாமின்!

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது நான் ஏன் சாக வேண்டும்? – ஜோதிமணி பளார் கேள்வி

Admin

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Pamban Mu Prasanth

Leave a Comment