சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

SHARE

தஞ்சையில் திமுகவினர் சிகரெட் கொடுக்க தாமதம் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி – பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி பாண்டவர் , அவரது நண்பர்கள் மன்னார்குடி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர், முருகேசன், மற்றும் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு சூரக்கோட்டையில் உள்ள ஒரு ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர்.

அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பெண்ணின் உடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கடை ஊழியர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அங்குள்ள சேர், டீ பாய்லர் ஸ்டாண்டு, இரு சக்கர வாகனம் மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

தகவலறிந்து கடையின் முதலாளி ஆனந்தன் சூரக்கோட்டையில் உள்ள ஆட்களுடன் கடைக்கு வந்துள்ளார். அவர்களை கண்டதும் தகராறில் ஈடுபட்ட ஆறு நபர்களும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரின் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

Leave a Comment