கோவில்களில் அர்ச்சகர் நியமனம் செய்வது குறித்த தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆகமம் விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பு உள்ளதாக சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் ஆகஸ்டு 25ஆம் தேதிக்குள் அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்