இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

SHARE

இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரில் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை அவதூறாக சித்தரித்து மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பரப்பும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டு வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இச்செயல் அவர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் பின்னால் இருக்கும் யாருடைய தூண்டலின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது குற்றவியல் நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், Modern Times என்ற அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

Leave a Comment