5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

SHARE

ஜெய்ப்பூர்:

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த 20 வயது இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜூனு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததற்காக கைது செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

காவல்துறை தரப்பில் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அளிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாதவராக வழக்கை எதிர்கொண்டார்.

வழக்கின் 26ஆவது நாளிலேயே விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், 27ஆம் நாளில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் கண்களில் சிறுது கூட வருத்தம் காணப்படவில்லை. அவர் வருந்தி இருந்தால் தண்டனை வேறு விதமாக இருந்திருக்கும் – என்றே நீதிபதி குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் வேகமாக செயல்பட்டு வலுவான ஆதாரங்களை அளித்த காவல்துறைக்கும் நீதிபதி பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

Leave a Comment