பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

SHARE

பஞ்சதந்திரம் டாஸ்க் ஆரம்பித்த நாளே முடியவில்லை என்பதால், அன்றிரவில் இருந்தே ஆரம்பித்தது பிக் பாஸ். வீட்டுக்கு வெளியிலேயே அமர்ந்திருந்தனர் இசை, தாமரை, சின்னப்பொண்ணு ஆகியோர். வெளியில் இருந்த நாணயத்திற்கு வந்த அபிஷேக் ’இத நான் எடுத்துகுறேன் கத்தாதீங்க’ன்னு சொல்ல, ’அதெல்லாம் முடியாது, நான் கத்துவேன்’னு இசை சொல்ல… ’லூசு உனக்கு தாண்டி எடுக்குறன்’னு சொன்னார் அபிஷேக். அதற்கு இசையும் ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். அப்படினா எனக்கு உதவி வேணும்னு சொல்லாமல் சொல்கிறாரா இசை?.

இந்த பஞ்சதந்திரம் டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து, யார் நாணயத்தை எடுத்தாலும், இது இசைக்காக, இது சின்னபொண்ணுக்காக, இது தாமரைக்காக என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால், நீங்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல் அல்லவா உள்ளது…? அப்படி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்றால், நாணயம் எடுக்க தடுமாறுகிற அவர்களுக்கு, நாணயம் எடுத்த யாருமே “இது உனக்காகதான் எடுத்தேன் நீயே வெச்சிக்கோ, நீ ஒளிச்சி வெச்சாலும் நான் எடுக்கமாட்டேன்”னு எந்த யோக்கியனும் சொல்லலையே…. ஏன்?
அப்போ இதுவரைக்கும் உனக்காக எடுத்தவன்னு சொன்னவன் எவனும் யோக்கியன் இல்லைன்னு தெரியுது….. இது பாக்குற நமக்கே தெரியுது, ஆனா அங்க உனக்காகதான் எடுக்குறன்னு சொல்றவங்ககிட்ட, அப்போ என்கிட்ட குடு நான் பாத்துக்குறன்னு ஏன் அவங்க யாருமே கேக்க மாட்றாங்க. (இதெல்லாம் பாக்கும் போதுதான் பிக் பாஸ் ஸ்கிரிப்டோன்னு தோணுது.) அவங்க சொல்ற எல்லாத்துக்குமே இந்த பலவீனமாக பார்க்கப்படுகிற மூன்று பேரும் எதுவுமே கேக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்த போட்டியில் மற்ற ஹவுமேட்ஸை விட ஓவர் அங்கலாப்புடன் திரிவது இரண்டு பேர். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று வலிய வந்து உதவுவதால் மக்களால் ஈர்க்கப்படுவோம் என்று திரிகிற அபிஷேக். இன்னொன்று, விஜய் டிவியில் நான்தான் ஒரே பெண் தொகுப்பாளர் என்று கர்வத்துடனும், அதிகாரத்துடனும் திரிந்து கொண்டிருந்த பிரியங்கா, இங்கேயும் அவருக்காக ஒரு நாணயத்தை எடுத்த பிறகும் மற்ற நாணயங்களை எடுக்க போராடுவதும் முக்கியமாக தன் எதிரிகள் ஜெயித்து விடக்கூடாது என்று அங்கலாய்ப்பதும், பிரியங்காவின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அனைத்து நாணயங்களும் கைப்பற்றபட்டது என்று பிக் பாஸ் அறிவிக்க, சிறையில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். போட்டி முடிந்ததே என்று பிரியங்கா விடாமல் மற்ற யார் யார் நாணயத்தை எடுத்தார்கள், அது எங்கிருக்கிறது என்று விடாமல் வீட்டையே அலசிக் கொண்டிருந்தார்.

எல்லாருடைய துணிகளையும் எடுத்து தேடிக்கொண்டிருந்தார் பிரியங்கா. இப்படி மற்றவர்களின் துணிகளை தொடுவதற்கு உரிமைக் கொடுத்தது யார்…? இதில் அவமானத்தின் உச்சக்கட்டமாக சின்னபொண்ணுவை சோதனை செய்ய வேண்டும் என்று தனி அறையில் சென்று தடவி பார்ப்பது மிகப்பெரிய கொடுமை. இதற்கு அந்த வீட்டில் இருந்த ஒருவர்கூட சின்னபொண்ணுக்கு ஆதரவாகவோ, அல்லது பிரியங்காவுக்கு எதிராகவோ பேசவே இல்லை.

எல்லாம் முடிந்தாயிற்று, அவரவர் எடுத்த நாணயத்தை அவரவர் பாதுகாப்பது தான் அடுத்த நடவடிக்கை, இதில் மற்ற நாணயங்கள் எங்கே என்று தேடுவதும், சின்னபொண்ணு போன்றோரை சோதிப்பதும் என்ன விளையாட்டு?

விளையாட்டில் தன் எதிரி ஜெயித்துவிடக்கூடாது என்று நினைக்கும் பிரியங்கா, அக்ஷராவின் நாணயத்தைத் தேடுவதிலேயே தீவிரம் காட்டினார். அது ராஜூவிடம் தான் இருக்கும் என்று எண்ணி அவரிடம் சென்று நேரடியாக கேட்கிறார். அதற்கு ராஜூ எதுவும் சொல்லாமல், நீ என்ன வேணாலும் பேசு நான் என்கிட்ட இருக்குன்னும் சொல்லமாட்டேன், இல்லைன்னும் சொல்ல மாட்டேன் என்று பார்த்துக்கொண்டே இருந்தார். ராஜூவிடம் பதில் கிடைக்காததால் நேரடியாக அக்ஷராவிடமும் கேட்க போக, சண்டை பெரிதானது.

இந்த வீட்டில் ஜொலித்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தேர்ந்தேடுக்கும் பணியில், வீதியை மீறி அக்ஷரா மதுமிதாவிடம் சென்று பாத்து நடந்துக்கோ என்று பேப்பரில் எழுதிக்காட்டியதை சபையில் போட்டிடைத்தார் பிரியங்கா…. (ஏன் பிக் பாஸ் இந்த சீன்லா டிவில போடலையே, ஹாட் ஸ்டார்ல அன்சீன்ல‌ கூட இல்லையே…?)

ஆனா சும்மா சொல்லக்கூடாது, சரியான் கேள்விதான்… ஆனா பிரியங்கா.. நீங்க நிரூப்பிடம், ‘இவங்க ரெண்டு பேரும் தான் லவ்வா?’ன்னு நீங்க கையில எழுதிகாட்டினது என்ன கணக்குன்னு எனக்கு தெரியல… யாரா இருந்தாலும் நியாயமா பேசணும் இல்லையா பிரியங்கா…

ஆனா இவ்ளோ தூரம் அக்ஷராகிட்ட இருக்குற நாணயத்துக்காக சண்டைப் போட்டதெல்லாம் சுத்த வேஸ்ட் என்பது பிரியங்காவிற்கு தெரியவில்லை… ஏன்னா அக்ஷராவின் நாணயம் முதல்நாளே காணாமல் போய்விட்டது…. இது தெரியாமலே பிரியங்கா தான் யார் என்று, அவரே மற்றவர்களுக்கு காட்டிவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

“தல-தளபதி” சந்திப்பு – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

Leave a Comment