பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

SHARE

பிக் பாஸ் நல்லாத்தான் போயிட்டு இருக்கா?-ன்னு பலருக்கும் தோன்றிய‌ கேள்வியை கண்டு, அதற்கு பதில் சொல்லும் விதமாக ‘இந்த வருடமும் பிக்பாஸ் நல்லாத்தான் போயிட்டு இருக்கு’ன்னு நிகழ்ச்சியை ஆரம்பித்தார் கமல்.

அகம் டிவி வழியாக வீட்டிற்கு சென்ற கமல், பிக் பாஸ் முந்தின சீசனை பார்த்துள்ளீர்களா? என்ற கேள்வியோடு உரையாடலை ஆரம்பித்தார். பலரும் பல பதில்கள் கூற, முழு பூசணிக்காயை மறைக்கும் விதமாக ‘நான் பார்த்ததே இல்லை’ என்று கூறினார் அபிஷேக். அவர் வீடியோ வைரல் ஆனது அவருக்கு தெரியாது இல்லையா… பாவம்…

அடுத்து யார் யாரோட கதைகள் உங்களுக்கு பிடித்தது, எந்தக் கதைகளில் ஈடுபாடில்லை என்று கேட்டு கொஞ்சம் நேரத்தை ஓட்டினார் கமல். பின்னர் நாமினேஷனில் உள்ள ஐவரை ஒன்றாக உட்கார வைத்து, ஒவ்வொருத்தராகக் காப்பாற்றினார். இறுதியில் ஐக்கி மற்றும் நாடியா இருக்க, ஐக்கியை காப்பாற்றினார் பிக் பாஸ். இதனால் இந்த வாரம் வெளியேறியது நாடியா சாங்.

நாடியா சாங் பற்றி தற்போது நிறைய டிக் டாக் வீடியோக்கள் வந்துள்ளன‌, அதாவது மலேசியா வாழ் மக்கள் நிறைய பேர் நாடியா சாங்கிற்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர். அதன் எதிரொலியாக இந்த வெளியேற்றம் இருந்திருக்குமோ? என்றும் தோன்றுகிறது. இருந்தாலும் வீட்டில் அவர் பெரிதாக எதிலும் ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தார் என்றும் பார்த்த நமக்கே தெரிகிறது. இதை விட பிக் பாஸ்க்கு இந்த நாடியாவ வெச்சு கண்டெண்ட் வாங்க முடியாது -ன்னும் தோணுச்சோ என்னவோ…

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

‘மரணத்தின் விலை’ – புதிய சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்கதை நமது மெய் எழுத்து தளத்தில் வெளியாகிறது

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

Leave a Comment