திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பஜக பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது எம்.ஜி.ஆர் “இன்றைக்கு நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மரியாதைக்குரிய எம்ஜிஆர் எனது நினைவுக்கு வந்தார்.
நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்கு செல்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கே மக்களிடத்தில் நான் பேசினேன். அப்போ இன்றைக்கு அவர் எங்கு பணியாற்றினாரோ அந்த மண்ணுக்கு நான் இங்கு வந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அந்த குடும்ப பாரம்பரியத்தில் இருந்து மிகப்பெரிய நல்லாட்சி நடத்தியதன் மூலம் மரியாதைக்குரிய எம் ஜி ஆர் அவர்கள் தரமான கல்வியும் நல்ல சுகாதாரத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெண்களும் அவரை மிகப் பெரிய அளவில் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் ஏழை மக்கள் அத்தனை பேரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக வரவில்லை. ஆனால், அவர் துரதிஷ்டவசமாக இன்றைக்கு திமுக தமிழகத்தில் எம்ஜிஆரை அவமதிப்பது போல அவரை கேவலப்படுத்துவது போன்ற ஒரு ஆட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர்க்கு பிறகு இந்த நாட்டில் யாராவது ஒருவர் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அமையார் ஜெயலலிதா. அவர்களின் ஆட்சி தான். அவர் தம்முடைய வாழ்க்கையை முழுவதையும் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார் என்பதை என்னால் சொல்ல முடியும். சில நாட்களுக்கு முன்னால் தான் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த மண்ணிலிருந்து அவருக்கு நான் மீண்டும் ஒரு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அது மட்டுமல்ல ஜெயலலிதா அவர்களுடன் நான் நெருங்கி பல்லாண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அவர் மக்களோடு செயல்படுத்திக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தார் என்பதை நாம் அத்தனை பேர் அறிவேன். எம்ஜிஆர் கொள்கை கடைபிடித்து அதன் மூலமாக மக்களுக்காக பணியாற்றினார் இன்றைக்கும் தமிழகத்தில் அத்தனை வீடுகளிலும் அவர்கள் நினைவு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.