குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

SHARE

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்:-

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கபட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாட்டு அரசு வெளியிட வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுகொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

Leave a Comment