முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

SHARE

நடிகர் அஜித் உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஐசியு வில் உள்ளார் என்றும் வழக்கமான சோதனைதான் என்றும் மாறி மாறி செய்திகள் வந்ததோடு யூட்யூப் யூகங்கலும் சேர்ந்து அஜித்தின் உடல் உபாதையை வணிகப்பொருளாக்கி விட்டன.

அவசர அவசரமாக செய்தி வெளியிட வேண்டிய அவசியம் மெய்யெழுத்துக்கு இல்லை என்பதோடு முறையான தகவல்களை உறுதி செய்து கொண்டு செய்தி வெளியிட வேண்டும் என்று உறுதிப்பாட்டோடு இருந்தது. இதோ முழு விவரங்கள்.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் அஜித் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித் உடம்புக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் குறித்து விசாரிக்க தொடங்கினார்கள். இதற்கிடையில் அஜித்குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் அதேபோல செய்தி வெளியாகிய நிலையில், நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், அதிகாரப்பூர்வமாக தகவல் உறுதி செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறுவை சிகிச்சை முடிந்து அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நடிகர் அஜித்திற்கு காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி (வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பே சொன்னாரா?

முன்பே காதுகளுக்குள் ரீங்காரம் கேட்கும் டினிட்டஸ் என்ற உபாதை குறித்து, நடிகர் அஜித் சொன்னதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, , நடிகர் அஜித் குமார் தெரிவித்ததாக அவரது மேலாளர் பதிவிட்ட ட்வீட் அது. அதில், “உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நிபந்தனைகளற்ற அன்புடன் என்றும் – அஜித்” என்று குறிப்பிடப்பட்டு, காதுகளுக்குள் ரீங்கார சத்தம் கேட்கும் டினிட்டஸ் என்ற, காது தொடர்பான பிரச்னை குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதிவைப் பகிர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒலி மாசு குறித்து குறிப்பிட்டு, சினிமா படப்பிடிப்பு தளங்களில் உருவாகும் பெரும் ஒலியை தவிர்க்கவும் குறைக்கவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.




SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

Leave a Comment