இத்தாலியில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்று ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுவதாக கூறி ஒன்றுமில்லாத மலைமேல் கடவுள் வந்ததாக ஊரை ஏமாற்றுவார்.
அந்த பாணியில் இத்தாலியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் சால்வடோர் கராவ் என்பவர் “நான்” என்ற தலைப்பில் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த உருவமும் இல்லாத வெற்றிடத்தை சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
இத்தாலிய ஏல நிறுவனம் ஆர்ட் ரைட் மே மாதத்தில் “அளவிடமுடியாத சிலை” என்ற பெயரில் ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த வெற்றிடம் முழுவதும் முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது என சால்வடோர் கொடுத்த விளக்கத்தை கேட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.13 லட்சத்திற்கு சிற்பத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.
– மூவேந்தன்