இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

SHARE

தமிழக அரசின் சாலைப் போக்குவரத்துத் துறையால் தொலைதூர வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், வழியில் உணவு இடைவேளைக்காக உணவகங்களில் நிற்பது வழக்கம்.

மிகப் பெரும்பாலும் அப்படியாக நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் விலை மிக மிக அதிகமாகவும், உணவின் தடம் மிக மிக மட்டமாகவும் இருக்கும். ஆனால் ஒரு வெளிப்படையான ஊழலாக போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்கு உரிய தொகை கொடுக்கும் உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக அரசு தொலைதூரப் பேருந்துகள் எந்த உணவகங்களில் நிற்க வேண்டும் என்பது குறித்து நேற்று விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் பல வரவேற்கத்தக்க அம்சங்களோடு, ஒரு சர்ச்சைக்கு உரிய அம்சமும் இருந்தது.

அந்த அறிவிப்பின் வாசகங்கள், “இந்த (கீழ்க்கண்ட) நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் உணவகங்களுக்கு ஒரு ஆண்டிற்கு உரிமம் வழங்கப்படும். உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். பயோ கழிவறை இருக்க வேண்டும். பேருந்துகள் உணவகத்தில் இருந்து வெளியே வரும் போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையில் இருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும் படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி இருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்குத் தெரியும் படி வைக்கப்பட வேண்டும். பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் உணவில் வாங்கும் பொருட்களுக்கும் கணினி மூலம் ரசீது தர வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். பயணிகள் அருந்துவதற்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி விலையை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டு உள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்”.

இதில் ”சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்” – என்று உள்ள வாசகமே கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 

”மேடைகளில் மக்களின் உணவு சுதந்திரத்தில் குறுக்கிடும் அமைப்புகளையும் கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கும் திமுகவினர் தங்கள் ஆட்சியில் என்ன செய்கிறார்கள்?” – என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் வெளியிடப்பட்ட புதிய செய்திக் குறிப்பில் அந்த சர்ச்சைக்கு உரிய வாசகம் மட்டும் நீக்கப்பட்டு உள்ளது. எனவே பயணிகளுக்கு அசைவ உணவு வழங்குவதற்கு இனி தடையில்லை. ஆனால் இந்த உத்தரவுகள் எந்த அளவுக்குக் கண்காணிக்கப்படும்? இதுவரை மக்களிடம் கொள்ளையடித்த சாலையோர உணவகங்கள் திருந்துவார்களா? – என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

Leave a Comment