சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

SHARE

சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடையவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், சின்மயா நகர், வடபழனி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு ஆகிய 8 இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

மொத்தம் 48 லட்சம் ரூபாய் அளவிற்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளையடித்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்த நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.

இந்நிலையில், எடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானாவில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

Leave a Comment