சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

SHARE

சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தீபா, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளை மூளைச் சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் பக்தை சுஷ்மிதா கைதான நிலையில், ஆசிரியை தீபா தலைமறைவானதாக கூறப்படுகிறது. மற்றொரு ஆசிரியை பாரதி, வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில், தமக்கு முன் ஜாமீன் வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியை தீபா மனு தாக்கல் செய்துள்ளார். ஆசிரியை தீபாவின் முன் ஜாமீன் மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்..!!!

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

Leave a Comment