போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

SHARE

பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தேனியில் கொண்டாடப்பட்டது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் பங்குபெற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் அனல்பறந்து வரும் நிலையில், அதிமுகவை திடுக்கிட வைக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அவர் பேசியதாவது, “அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளை மீறி போலி பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கட்சியை கபளீகரம் செய்தார்.

நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர். பழனிசாமியை அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தான் டிடிவி அமமுகவை தொடங்கினார்.

நாங்களும் அதே கொள்கையோடு மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துகிறோம். எடப்பாடி பழனிசாமி நிறுத்தம் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடையவிடமாட்டோம். ராஜ துரோகி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்”

File Pic

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தன் மீது உள்ள பழியினை சட்டரீதியாக எதிர்கொள்வார் கே.டி.ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

Leave a Comment