என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

SHARE

தனது வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என முயற்சி நடந்து வருவதாக கூறிய அவர் என் வீட்டில்தான் ரெய்டு நடக்கும் என முதலில் எதிர்பார்த்ததாகவும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என கூறினார்.

மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் பதவியில் நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது திமுகவின் கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள்.

என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், அனைத்து அதிமுகவினரும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்வீட்டில்தான் ரெய்டு நடக்கு என எதிர்பார்த்ததாக வேலுமணி கூறியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

3 முறை தற்கொலை செய்த ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்வார்: நாஞ்சில் சம்பத்

Admin

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

Leave a Comment