கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

SHARE

தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் வழிகாட்டுதல் படி தமிழகத்தில் அகழாய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்படியாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்றின் படம் வெளியாகி உள்ளது.

பண்டைய காலத்தில் ஆண், பெண் சிற்பங்களைச் செதுக்கும் பணியின் போது அவற்றை வேறுபடுத்திக் காட்ட தலை அலங்காரம், புருவம், கண், நெற்றி ,உதடு காதணி, ஆடைகள், கைகளில் வைத்திருக்கும் பொருட்கள், அணிகலன்கள் ஆகியவற்றை வைத்தே ஆண், பெண் என வேறுபடுத்திக் காட்டுவார்கள்.

தற்போது கிடைத்துள்ள இந்த கழுத்தளவு சிலையினை ஆணா பெண்ணா என்று பார்ப்பதற்கு காதணி, நெற்றி, கண், மூக்கு சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்ய முயற்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் சிகை அலங்காரம் (கொண்டையை) வைத்து சில கருத்துக்களை பகிர வேண்டி உள்ளது.

பொதுவாக ஆண்களுக்கான கொண்டையானது மேல் முகமாக தூக்கி இருக்குமாறு அமைக்கப்படும்.

பெண்களுக்கான கொண்டை எனும் பொழுது தலை மட்டத்திலும் அல்லது அதற்குக் கீழாகவும் இருக்குமாறு காட்டப்படும் .

அதற்கு காரணம் பொதுவாக பெண்களுக்கான கூந்தலானது ஆண்களைவிட அதிக அளவு இருப்பது இயல்பு .

அந்த வகையில் அதிக பாரம் கொண்ட முடியை தூக்கி கட்டும்பொழுது இயல்பாகவே சரிந்து இருக்கும்.

குறைவான கூந்தலை தூக்கி கட்டும்பொழுது தலைக்கு மேலே நிற்கும் எனும் காரணத்தால் சிற்பியானவர் பெண் கூந்தலை தலை மட்டம் அல்லது அதனை விட கீழ் நோக்கியோ இருக்குமாறு அமைப்பார்.

இதன் காரணத்தால் இந்த அகரம் அகழாய்வில் கிடைத்த சிற்பத்தை பெண் சிற்பமாக இருக்கலாம் என சிற்பிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த சிற்பத்தின் கீழ்ப் பகுதியும் கிடைக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்து ஆணா பெண்ணா என உறுதியிட்டு கூறலாம்.

இதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment