சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

SHARE

நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 20 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்

21. ஆலிங்கன ஹஸ்தம்.

சுட்டு விரல் முதல் சிறு விரல் வரை உள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று நெருங்கியதாக அமைத்து சுட்டு விரலையும் சிறு விரலையும் சிறிது மேல்நோக்கி கிளப்பி, கட்டை விரலை கைத்தளத்திலிருந்து உயர்த்தி தேவியின் உடலை அணைத்தவாறு இருக்கும் முத்திரை இதுவாகும். இம்முத்திரை பொதுவாக இடுப்பை தொட்ட நிலையிலோ, புஜத்தை அணைத்த நிலையிலோ அமையும். உமாசகிதர் மூர்த்தத்திலும், லஷ்மி நாரயணர் மூர்த்தத்திலும் இம்முத்திரை இருக்கும்.

22. தனுர் ஹஸ்தம்: 

கைத்தலத்தை உள்முகமாகத் திருப்பி, நடுவிரலையும் அணிவிரலையும் சேர்த்து அவற்றை வில்லின் மீது படியச் செய்து, சுட்டுவிரலையும் சிறுவிரலையும் மேல் நோக்கி உயர்த்தி, சிறிது வளைத்து  பெருவிரல் கைத்தலத்தை உள்முகமாகப் பார்த்த வண்ணம் மடக்கி, விரல் நுனியை வில்லின் பக்கத்தைத் தொட்டிருக்குமாறு அமைத்த கை அமைதியே தனுர் ஹஸ்தம் என்று சொல்லப்படும். தனுர், தனுசு – ஆகியவை வில்லைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.

சுட்டு விரல் நுனி படிமத்தின் புருவ மட்டத்தில் அமையும்போது நல்ல தோற்றம் பெற்று விளங்கும்.

இவ்வமைதியினை திரிபுராந்தக சிவ மூர்த்தத்திலும், கோதண்டராமன் படிமத்திலும் காணலாம்.

23. டமரு ஹஸ்தம்: 

விரல்களையும், கைத்தலத்தையும் விரித்து, நடுவிரலையும், அணிவிரலையும் ஒன்றோடொன்று நெருக்கியமைத்து, கைத்தலத்தை நோக்கி பிகுவாக வளைத்து, கட்டை விரலை டமருகத்தை (உடுக்கையை) நோக்கி வளைத்து, சுட்டு விரலையும், சிறு விரலையும் செங்குத்தாக்கிச் சிறிதே முன்புறம் வளைந்து அமைத்த பிடி டமரு ஹஸ்தம் எனப்படும். உடுக்கை  பிடித்துள்ள பாவனையை இஃது உணர்த்தும்.

ஆடவல்லான் படிமத்தில் இதைச் சிறப்பாகக் காணலாம்.

24. தாடன ஹஸ்தம் 

பெருவிரல் முதல் சிறுவிரல் வரை எல்லா விரல்களையும் ஒன்றொடொன்று ஒட்டி, கட்டை விரலைக் கைத்தல மட்டத்திலேயே அகல விரித்து சிறிது பின்னோக்கிச் சென்று அமையும் பிடி தாடன ஹஸ்தம் எனப்படும். இது தண்டிக்கும் செயலை உணர்த்தும்.

சில நேரங்களில் இம்முத்திரையில் கைவிரல்கள் சற்று பிரிந்தும் அமையும்.

பொதுவாய் வதம் செய்யும் கடவுற் படிமங்களில் இம்முத்திரை காணப்படும்..

தர்மத்தை மீறும் யாவரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் முத்திரை இதுவாகும்.

கை விரல்களை விரித்து ‘ஓங்கி ஒரு அறைவிட்டா…’ என்பதுதான் தாடன ஹஸ்தம்.

தொடரும்…

  • மா.மாரிராஜன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மரணத்தின் விலை’ – புதிய சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்கதை நமது மெய் எழுத்து தளத்தில் வெளியாகிறது

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment