அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

SHARE

ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை எட்டு மாத குழந்தையின் இருதய ஆப்பரேஷனுக்காக ஏலம் விட்டு உதவியுள்ள வீராங்கனையினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

போலந்தின் ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா இவருக்கு, 2018ல் எலும்பு புற்று நோய் ஏற்பட்டது. இந்த சோதனையில் இருந்து விரைவாக மீண்டு, பயிற்சியை தொடர்ந்தார். சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் தாயகம் திரும்பிய மரியா மூலம், எட்டு மாதமே ஆன மிலோஜெக் மலிசா என்ற ஆண் குழந்தை இருதய பாதிப்பால் அவதிப்படும் செய்தியை அறிந்தார்.

ஐரோப்பிய நாடுகள் அந்த குழந்தைக்கு சிகிச்சை மறுத்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை.,மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார் உயிர் காக்கும் ஆப்பரேஷனுக்கு’ ரூ. 3 கோடி தேவைப்படும் என டாக்டர்கள் கூறினர்.

மகனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைய, போதிய வசதி இல்லாத பெற்றோர் பரிதவித்தனர் பலரிடமும் நிதி உதவி கேட்டனர்.

இந்த நிலையில் மரியாவும் உதவ முன் வந்தார். ஒலிம்பிக்கில் முதல் முறையாக வென்ற பதக்கத்தை ஏலம் விட்டு நிதி திரட்டி கொடுத்தார். இவர் கூறுகையில், பதக்கம் வென்ற தருணம் இனிமையானது.

அதன் உண்மையான மதிப்பு என் இதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கும். இதை தவிர பதக்கம் என்பது வெறும் பொருள் தான். என் வீட்டு ஷோ கேசில் இருந்து தூசி அடைவதை காட்டிலும், ஒரு உயிரை காப்பாற்ற உதவட்டும்.

இதன் காரணமாகவே இருதயம் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரைக் காக்க வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட முடிவு செய்தேன். இப்போது 90 சதவீதம் நிதி சேர்ந்துள்ளது. விரைவில் ஆப்பரேஷன் நடந்து, மலிசா குணமடைவான்,என்றார்.

மரியாவின் வெள்ளிப்பதக்கத்தை போலந்தின் ஜப்கா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இத்தொகை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரியாவின் நல்ல உள்ளத்தை பாராட்டிய ஜப்கா நிறுவனம், பதக்கத்தை அவரிடமே திரும்ப கொடுத்தது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment