மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

SHARE

நேற்று ஷார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றது. 

மணல் புயலால டாஸ் போட கொஞ்சம் நேரம் எடுத்தாலும், டாஸ்ல வென்ற தோனி நல்ல முடிவு தான் எடுத்தாரு. தோனி ஃசேஸிங் பண்றோம்னு சொன்னாரு. அவருக்கு தெரியாதா மைதானத்தை பத்தி. வழக்கம் போல எந்த மாற்றமும் இல்ல சென்னை அணியில. ராயல் சேலஞ்சர்ஸ்,  டிம் டேவிட்டையும், நவ்தீப் சைனியையும் கொண்டு வந்தாங்க. 

கோலி டீம்ல கொண்டு வந்தத மாற்றதை விட அவர்கிட்ட இருந்த மாற்றம் தான் ஹைலைட்டே. முதல் பந்தே பவுண்டரில ஆரம்பிச்சு தொடர்ந்து சிக்ஸர், ஃபோர்ன்னு அதிரடியா ஆடினாரு. அதனால இந்த போட்டில கோலி புதுசாவே தெரிஞ்சாரு. இதுல எல்லாத்தையும் விட கெத்தே, தாக்கோரோட பந்துல நோ-லுக் ஷாட் அடிச்சது தான். அடிச்சிட்டு பந்து எங்கப் போகுதுன்னு பாக்கவே இல்லனா பாருங்க. செம்ம மாஸ் பேட்டிங் கோலிகிட்ட. 

இவர்கூட இன்னும் அதிக எனர்ஜியா இருந்து ஆடினது படிக்கல், ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லைன்னு அதிரடியா ஆடினாங்க. நல்ல ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் கிடைச்சது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு. ஆனா அது ப்ராவோவோட பந்துல மாறிடுச்சு. கோலியோட முதல் விக்கெட்க்கு அப்புறம் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு எல்லாமே சரிவா போச்சு. 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தாரு கோலி.  ஆனா டிவில்லியர்ஸ், படிக்கல், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஹர்ஷல்னு அடுத்தடுத்து விக்கெட் போக 20 ஓவருக்கு 156 ரன்கள்தா எடுத்தது. பெங்களூர் அணியோட மிடில் ஓவர் தடுமாற்றம் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமா அமைஞ்சது.. 

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சென்னை அணி களம் இறங்கியது. சென்னை அணியோட ஓப்பனிங்கும் நல்லாவே அமைஞ்சது. ருதுராஜ் மற்றும் டூப்ளஸி நல்ல ஃபார்ட்னார்ஷிப் கொடுத்து பவர்பிளேல 59 ரன்கள் எடுத்தாங்க. மிடில் ஓவர்ல சென்னை அணியும் கொஞ்சம் மந்தமா ஆடுச்சு, சஹலோட பந்துல 9ஆவது ஓவர்ல ருதுராஜ் விக்கெட் விழ, அடுத்து டூப்ளஸி அவுட் ஆகிட்டாரு. மந்தமான பேட்டிங், அடுத்தடுத்து விக்கெட்ன்னு ஆட்டம் கொஞ்ச்ம் சறுக்குனது சென்னைக்கு.

அப்புறம் மொயின் மற்றும் ராயுடு கூட்டணி சில ஃபோர்களை  தட்டிவிட்டு அடுத்தடுத்து அவுட்டானாங்க. கடைசி  கூட்டணியா அமைஞ்ச தோனி மற்றும் ரெய்னாவின் ஆட்டத்துல சென்னை அணியோட வெற்றி உறுதி ஆனது. சென்னை அணியில மிடில் ஓவர் மந்தமானாலும், நல்ல ரன் ரேட் இருந்தது. டுப்ளஸி 31 ரன்கள், மொயின் 23 ரன்கள், ராயுடு 32 ரன்கள் எடுத்திருந்தாங்க. 

விக்கெட் போனாலும் ரன்ரேட்டைக் குறைக்காமல் எல்லாரும் அடிச்சு ஆடிட்டே இருந்ததும், கடைசி ஓவர்ல பாத்துக்கலாம்-ன்னு இல்லாம சீக்கிரமே ஆட்டத்த முடிக்க ஆர்வம் காட்டுனதும் சென்னை அணியோட வெற்றிகரமான ஃபார்முலாக்களா இருந்தது. 

கிட்டதட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு போயிடுச்சுன்னே சொல்லலாம். சென்னை சுப்பர் கிங்ஸ்க்கு கண்டிப்பா விசில் போடணும்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

Leave a Comment