நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

SHARE

தென்கொரியாவில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீட்டை திறந்து உணவு திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் வீட்டில் பூனை வளர்க்க அதிக நாட்டம் காட்டமாட்டார்கள், ஆனால் தற்போது பணம் கொடுத்து பூனை வாங்கி வளர்க்கும் வழக்கம் வந்துவிட்டது.
பூனை செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் வீட்டை நம்பர் லாக் பூட்டில் பூட்டி விட்டு வெளியே செல்கிறார்.

இதையடுத்து பூனை ஒன்று, வீட்டின் உரிமையாளர் போட்ட நம்பர் லாக்கை தனது காலால் அழுத்தி வீட்டை திறந்து உள்ளே செல்கிறது.

பின்னர் வீட்டில் இருக்கும் உணவுகளை தேடி சாப்பிடுகிறது. இந்த நிகழ்வு குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், பல முறை  பூனையை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அந்த பூனை தங்களது தெருவில் சுற்றித்திரிவதாக தெரிவித்தார்.

பூனையின் தொந்தரவு தாங்காமல் டோர் லாக் கருவியில் லேமினேஷன் பேப்பரை போட்டபோது,  அந்த பூனை அதையும் கிழித்துவிட்டதாக நகைப்புடன் தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

Leave a Comment