ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

SHARE

இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறை தேவைப்படாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் அலைக்கு பின், உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து அங்கு உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பிற நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டன. பல மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக அங்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஜூலை 21ம் தேதி முதல் ஊரடங்கிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படும் என ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜூலை 19ம் தேதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும், எனவே இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Admin

கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

Leave a Comment