ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அகமதாபாத்

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவுலிங் செய்வதாக கூறியது. இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக ஷாபாஸ் விளையாடுவதாகவும், பஞ்சாப் கிங்ஸ் அணியில், காயம் காரணமாக மயாங் அகர்வால் இல்லை, ஹென்றிக்ஸ், அர்ஷ்தீப் அவர்களுக்கு மாற்றாக ப்ரப்சிம்ரன், ஹர்ப்ரீத் விளையாடுவதாகவும் தெரிவித்தனர். 

கேஎல் ராகுல். ப்ரப்சிம்ரன் உடன் கள இறங்கி நல்ல தொடக்கம் தந்தார். 4ஆவது ஓவரில் ப்ரப்சிம்ரன் அவுட்டாகி விட கெயில் உடன் கூட்டணி சேர்ந்தார் ராகுல். அட்டகாசமான கூட்டணி, ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்க விட்டார் ராகுல். ஆட்டத்தில் கேஎல் ராகுல் 5 சிக்ஸர் 7 பவுண்டரி என 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் இருந்தார். சிராஜின் பந்தில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர், சஹலின் பந்திலும் டீப் மிட் விக்கெடில் ஒரு சிக்ஸர், சாம்ஸின் பந்தில் லாங் ஆஃப் ஏரியாவில் ஒரு சிக்ஸர், ஜேமிசன் பந்திலும் டீப் லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர், கடைசி ஓவரில்  ஹர்ஷல் பட்டேல் போட்ட யாக்கர் பந்திலும் அழகான ஒரு சிக்ஸர் என கேஎல் ராகுலின் சிக்ஸர்கள் வான வேடிக்கைகள்தான். 

கெயில் கூட்டணியில் வேகம் எடுத்த ராகுல், கெயில் விக்கெட் வீழ்ந்த பின் தடுமாறினார். 15 வது ஓவரில் ஹர்ப்ரீத் உடன் கைகோர்த்தார் ராகுல். இந்த கூட்டணி நிஜமாகவே  பஞ்சாபின் வெற்றிக்கு கைகொடுத்தது. 16, 17 வது ஓவரில் தட்டி கொண்டிருந்த ஹர்ப்ரீத்தை பார்த்து தட்டிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது, தூக்கி விடு என்று கூறினார். அவருடன் சேர்ந்து ராகுலும் கடைசி ஓவரில், பட்டேலின் பந்தில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர்களை அடித்து 150 இல் இருந்த ஸ்கோரை 179க்கு கொண்டு வந்தனர்.

கெயில் ஒரு சில ஆட்டங்களில் தடுமாறினாலும், அதை ஈடு செய்யும் வகையில் இந்த ஆட்டத்தில் கெத்து காண்பித்தார்.  2 சிக்ஸர், 6 பவுண்டரி என 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் கெயில். ஆரம்பத்திலேயே அடித்து ஆடிய கெயில் மூலம் ராகுலுக்கு நல்ல வேகம் கிடைத்தது. இதனால் கெயில் மற்றும் ராகுலின் கூட்டணியில் 80 ரன்கள் கிடைத்தன. ஜேமிசனின் 2ஆவது ஓவரில் கெயிலின் ஆட்டத்தில் ஆர்சிபியே அலறியது. முதல் பந்தில், லாங் ஆஃப்பில் ஒரு பவுண்டரி, 2ஆவது பந்தில், மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி, 3ஆவது பந்தில், லாங் ஆன்னில் ஒரு பவுண்டரி, 4ஆவது பந்தில், மறுபடியும் லாங் ஆன்னில் ஒரு பவுண்டரி, 5ஆவது பந்து, டாட் பந்தாகிட, 6ஆவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் ஏரியாவில் ஒரு பவுண்டரி என 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் கெயில். வாயை பிளந்து நின்றது ஆர்சிபி. இறுதியில் சாம்ஸின் பந்தில் தூக்கி அடிக்க முயன்று, டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனது கெயிலின் விக்கெட்.

ஹர்ப்ரீதின் முதல் போட்டி, ஆரம்பமே அமர்க்களப்படுத்தி விட்டார். இந்த முதல் போட்டியிலேயே பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் அசத்திவிட்டார் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான். பேட்டிங்கில் கடைசி 5 ஓவரில் ஆட்டத்தையே மாற்றிவிட்டார். 18ஆவது ஒவரில் பட்டேலின் பந்தில், மிட் ஆஃப்பில் ஒரு பவுண்டரி, லெக் சைட் பவுண்டரியில் ஒரு சிக்ஸர் என பறந்தது பந்து. கடைசி 5 ஓவரில் 61 ரன்கள் ராகுல் மற்றும் ஹர்ப்ரீதின் கூட்டணியால் கிடைத்தன. 17 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 

பேட்டிங்கில் கைகொடுத்தவர், பவுலிங்கிலும் மிரள வைத்தார். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ஹர்ப்ரீத். 11 வது ஓவரில், கோலியின் விக்கெட் லெக் ஸ்டெம்பிலும், அதே ஓவரில், மேக்ஸ்வெல்லின் விக்கெட் ஆஃப் ஸ்டெம்பிலும் போல்ட் ஆகின. ஒரே ஓவரில் 2 விக்கெட்கள். ஆட்டமே மாறிப்போனது. பின்னர் 13ஆவது ஓவரில் டிவில்லியர்ஸின் விக்கெட் என மொத்தம் மூன்று விக்கெட்களை இவர் எடுத்தார். இந்த மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்ததினாலோ என்னவோ ஆர்சிபியின் ஆட்டம் பஞ்சாபிடம் எடுபடவே இல்லை. 

முந்தைய போட்டிகளில் 200க்கும் மேல் ரன்கள் அடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நேற்று 180 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் திணறிப் போனது. கோலி, படிக்கல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என சூப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஆர்சிபி தோல்வியை தழுவியதை ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. 

மெரிடித்தின் பந்துக்கு ஆர்சிபி திணறியது. இதனால் மெரிடித்தின் பந்தில் மூன்று ஓவரிலேயே படிக்கல் போல்ட் ஆகிச் சென்றார்.  கோலியும் ஹர்ப்ரீத் பந்தில் போல்ட் ஆனார். அடுத்தடுத்து  மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என விக்கெட் மழைதான். ஆர்சிபியின் மேட்ஸ்மேன்கள் தான் ஆட்டத்தில் சொதப்பினார்கள் என்றால் பவுலர்களும் சுமாராகத்தான் விளையாடினார்கள். பட்டேல் ஆரம்பத்தில் கிடுக்குபிடி பிடித்தாலும் கடைசி ஓவரில் பதற்றத்தில் ரன்களை அள்ளி கொடுத்துவிட்டார். பர்ப்பிள் கேப் ஹோல்டர் இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஜேமிசன் சற்று நன்றாக ஆடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் ஆர்சிபியால் 20 ஓவர்களுக்கு 145 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. ஆர்சிபி தோற்றது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

Leave a Comment