உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட கொரோனா தேவி கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தாக்க தொடங்கிய போது தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டப்பட்டது.
வேப்ப மரத்தடியில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இதனிடையே 5வது நாளான ஜூன் 11 ஆம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டியுள்ளார்.
ஆனால் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாகவும், இதனை நிலத்துக்கு சொந்தக்காரரான எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இடித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.