நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

SHARE

சாலை விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாடல் அழகியாக வலம் வந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து  பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்றப் படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானார்.உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், சல்ஃபர், பாம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்யாஷிகா. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய யாஷிகாவின் கார் மாமல்லபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிவேக பயணம் மற்றும் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ், நடிகை யாஷிகா ஆனந்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். விபத்தில் யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

“ஏழைகள் கூட வரி செலுத்தும் போது உங்களுக்கு என்ன?” – நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

“உடல் மெலிந்து ஆளே மாறிப்போன சிம்பு” – வெளியானது புதுப்பட அப்டேட்…!

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

Leave a Comment