திமுக அரசு இந்திய அரசினை ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது என டாகடர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் உணவக விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் , திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியதால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவர்களிடையே ஏற்படும் குழப்பம் நீங்கும் என கூறினார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமே சிறுமைபடுத்துவது போல உள்ளதால் திமுக தங்களது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவது தேசத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றார்