வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

SHARE

பாலியல் சர்ச்சை வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா வெளிநாடு செல்லாதவாறு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் வழக்கில் சிக்கினார்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

அதே சமயம் சிவசங்கர் பாபா வழக்கினை எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டேராடூன் செல்லும் தனிப்படை அங்கு அவரை விசாரணை செய்துபின்னர் கைது செய்யலாம் என கூறப்படுகிறது.

 ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி… ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

Leave a Comment