திமுகவில் டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!

SHARE

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் அதில் இருந்து விலகி கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனிடையே மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

Nagappan

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

தாலிபான்கள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் .. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Admin

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

Leave a Comment