தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்ட 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏறக்குறைய 116 அறிவிப்புகள் அடங்கியிருந்தன. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்துக்கான அறிவிப்புகளாக மட்டும் சுமார் 20 அறிவிப்புகள் உள்ளன.
மதுரைக்கான அறிவிப்புகள்:
மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம், மெட்ரோ ரயில் திட்டம், தோழி விடுதிகள், கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும் என்பன உட்பட 20 அறிவிப்புகள் மதுரையில் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்ததாவது, “இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழிற்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ளது அரசு. மதுரை மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@CMOTamilnadu) அவர்களுக்கும் , நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (@TThenarasu) அவர்களுக்கும் எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், மதுரை ஒரு மாவட்டத்துக்கு மட்டுமான திட்டங்கள் என்று அவற்றை சுருக்கிவிட முடியாது.