வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

SHARE

தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் ஏற்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார் .

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் முழுதும் அவ்வபோது மின் வெட்டு ஏற்படுவதாக சமூகதளங்களில் மக்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்தார்.

அதில் தமிழ்நாட்டில் மின் கம்பிகளின் மீது விழும் நிலையில் இருக்கும் 83 ஆயிரத்து 553 மரக்கிளைகளை அகற்ற வேண்டியுள்ளது என்று மரக்கிளைகளை கூட எண்ணி சொல்லிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக மின்சார பராமரிப்புப் பணியே செய்யவில்லை. இதனால் தான் மின்சார உள்கட்டமைப்பில் பலத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.எனவே பத்து நாட்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வெட்டு ஏற்படும். அதுவும் முன் அறிவிப்பு அளித்த பின்னரே மின் வெட்டு ஏற்படும் என்றார்.

மேலும் மின் கம்பிகளில் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி அதனாலும் மின் தடை ஏற்படுகிறது என்றும் கூறினார் செந்தில்பாலாஜி. இந்த அணில் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட, அரசியல் தலைவர்களும் அணிலை கையிலெடுத்துவிட்டனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜூலை 22 அன்று தனது ட்விட்டரில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்!

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று கிண்டலடித்துள்ளார்.

இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!. கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்!அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்! என்று அமைச்சார் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

இனிமே மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவுக்கு ரூ.600 இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

Leave a Comment