ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SHARE

ஒன்றிய அரசு எனக் கூறுவதன் காரணத்தைக் கேட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார் ஸ்டாலின். அதனால் தான் தற்போது மத்திய அரசை, ஒன்றிய அரசு என பயன்படுத்துவதாகவும், பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் ஒன்றியம் என்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார்.

மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால்தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதைத்தான் பயன்படுத்துவோம் என்றும் ஆணித்தனமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ’வாக்களிக்க தவறி விட்டோமே’ என்று வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி நடைபெறும் எனக் கூறிய முதலமைச்சர், கோவை உள்ளிட்ட எந்தவொரு மாவட்டத்தையும், எந்நாளும் புறக்கணிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் விலை உயர்வு.. சைக்கிள் ஓட்டி எதிர்ப்பு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்

Admin

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

Leave a Comment