தமிழகத்தில் தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போது மாணவர் சேர்க்கை இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்:
ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.கொரோன பாதிப்பு உள்ள, தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அவர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை.
பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றியும் தற்போது யோசிக்கவில்லை. கொரனோ பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைனில் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தளர்வுகள் பொறுத்தே முடிவு செய்யப்படும்.