மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

SHARE

வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தோ்தல் தேதி இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநிலத்தில் உள்ள பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. மற்றொருபுறம் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பராடா மைதானத்தில் இன்று நடைபெற்ற மெகா பேரணியில் வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

அப்போது 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்புர் தொகுதியிலும், கிர்த்தி ஆசாத் பர்தமான்-துர்காபுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் கிருஷ்ணாநகர் தொகுதி வேட்பாளராக மஹூவா மொய்த்ரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்கள் உள்பட 16 சிட்டிங் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் தொகுதி குறித்து பேசுவதற்கு முன் இந்தியா கூட்டணியோடு சேர வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தனித்து போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார் மமதா பானர்ஜி.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

Leave a Comment