போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

டெல்லி

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா இரண்டு மாற்றங்களுடன்  ஃபீல்டிங் செய்வதாக கூறினார். மும்பை அணியில், ஜெயந்த் யாதவுக்கு மாற்றாக ஜிம்மி நீஷமையும், நாதன் கூல்டர் நைலுக்கு மாற்றாக குல்கர்னியும் களம் இறக்குவதாகக் கூறினார். தல தோனி எந்த மாற்றமும் இல்லாமல் அதே ப்ளேயிங் லெவனோடு விளையாடுவதாக கூறினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி. வந்த வேகத்திலேயே போல்டின் முதல் பந்துக்கு பவுண்டரி அடித்து, இரண்டாவது பந்துக்கு கேட்ச் ஆகி வெளியேறினார் கெய்க்வாட். அடுத்து வந்த மொயின் அலியால் ஆட்டம் களை கட்டியது.  குல்கர்னியின் பந்தில் பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டார் டூப்ளஸி. அடுத்து வந்த போல்டின் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மொயின் அலியும் விளாசி தள்ளினார். 4 பவுண்டரி 4 சிக்ஸர் என பவர்பிளே ஓவரின் முடிவில் 49 ரன்கள் எடுத்தனர். 10ஆவது ஓவரில் நீஷமின் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார் மொயின் அலி. அடுத்து வந்த பும்ராவின் பந்தில் தூக்கி அடித்து கேட்ச் ஆனது மொயின் அலியின் விக்கெட். ஆனால் இந்த 2வது விக்கெட் ஃபார்ட்னர்ஷிப்பில் 61 பந்துகளுக்கு 108 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 

12 வது ஓவருக்கு பந்து வீச வந்தார் போலார்ட். மோசமான ஓவராக மாறியது சென்னை அணிக்கு. அடுத்தடுத்து ரெய்னா மற்றும் டூப்ளஸி இரண்டு விக்கெட்டுகள் கேட்ச் ஆனது. டூப்ளஸி 27 பந்தில் 50 ரன்களை எடுத்து அவுட்டானார். முக்கிய விக்கெட்டுகள் போனதும் சென்னை ரசிகர்கள் இதுக்கு அப்புறம் மேட்ச் பாக்கணுமா என்று யோசித்திருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக ஆட வந்தனர் ஜடேஜா மற்றும் அம்பத்தி ராயுடு. 

ஜடேஜாவை பார்த்ததும் ஆர்சிபியோடு விளையாடியது போலாட்ர்டுக்கு நியாபகம் வந்ததோ என்னவோ, இவன் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்று 14 வது ஓவருக்கு பந்து வீச வந்தார் போலார்ட். ஓவரின் 2வது பந்தில், அவுட் சைடில் சென்றது பந்து, ஆனால் போலார்ட் இன் சைடு எட்ஜ் என்று நினைத்து அவுட் கேட்டார் அம்பயரிடம். அம்பயரும் அவுட் கொடுத்து விட, சற்று யோசிக்காமல் ரிவ்யூ சென்றார் ஜடேஜா. அவர் தெளிவாக இருந்தார் பந்து அவுட் சைட் எட்ஜில் தான் சென்றது என்று. மூன்றாம் நடுவரும், ஜடேஜாவுக்கு  சாதகமாக நாட் அவுட் கொடுத்தார். அப்பாடா என்றது சென்னை ரசிகர்களுக்கு. அடுத்த 5 ஓவர்கள்தான் ஆட்டமே. 

ஜடேஜா மற்றும் ராயுடுவின் கூட்டணி பந்துகளை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார்கள். 16ஆவது ஓவரில் குல்கர்னியின் பந்தில், லாங் ஆன் மற்றும் சைட் ஸ்கிரீன் ஏரியாவில் 2 சிக்ஸர்களை அடித்தார் ராயுடு. ராயுடுவின் ஆட்டத்தை பார்த்து ஜடேஜா நீ அடிச்சு தள்ளு மாப்ள என்று அவருக்கே ஸ்ட்ரைக்கை கொடுத்தார். 17ஆவது ஓவருக்கு வந்த பும்ராவின் பந்தில், ஆளுக்கொரு பவுண்டரிகளை அடித்து 174 ரன்கள் எடுத்தனர். 

200 ஐ தாண்டிவிடுங்கள் என்று ரசிகள் சொன்னது அவர்களுக்கும் கேட்டது போல, 18ஆவது ஓவருக்கு வந்த போல்டின் பந்தில், ராயுடு 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி என விளாச அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வந்தன, அதுமட்டும் இல்லாமல் 20 பந்தில் 50 ரன்களை கடந்தார் ராயுடு.  19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும், 20 ஓவரில், குல்கர்னியின் பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில்  பவுண்டரியும் அடித்து 218 ரன்களோடு ஆட்டத்தை முடித்தது சென்னை அணி. ஜடேஜா மற்றும் ராயுடு வின் ஃபார்ட்னர்ஷிப் 108 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடவந்த மும்பை இண்டியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர் டிகாக் மற்றும் ரோஹித். தீபக் சஹாரின் முதல் பந்தே பவுண்டரி. ’பவர்பிளே ராஜா’ தீபக் சஹார் பார்ஃமில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவரும் தடுமாறினார், அவருடைய பந்தும் ஸ்விங் ஆகவே இல்லை. ரோஹித்தும் டிகாக்கும் ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார்கள். ரன்ரேட் 15ஆக இருப்பதால் எப்படியும் ஒரு ஓவருக்கு, 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க வேண்டும் என முடிவெடுத்து வந்தார்கள் அதுபோலவே ஆடினார்கள். பவர் பிளே முடிவில் 58 ரன்களை எடுத்தது மும்பை அணி. 

8ஆவது ஓவருக்கு ஸ்பின்னர்களை அனுப்பினார் தோனி. தாக்கூரின் பந்தில், ரோஹித் தூக்கி அடிக்க கெய்க்வாட்டின் கைக்கு சென்றது பந்து. அடுத்து 9ஆவது ஓவருக்கு பந்து வீச வந்தார் ஜடேஜா. ரோஹித் அடிக்க முயற்சிக்க இன் சைடு எட்ஜில் பந்து பட்டு தோனியின் கையில் சென்றது. அடுத்தடுத்து 2 விக்கெட் போனது மும்பை அணிக்கு. அடுத்து ஒன்று சேர்ந்தது க்ருணால் பாண்டியா மற்றும் டிகாக் கூட்டணி, 2 லெஃப்ட் ஹாண்டர்ஸ்க்கு ஸ்லிப் வேண்டும் என்று மொயின் அலியை அனுப்பினார் தோனி. மொயின் அலி வீசிய பந்து எட்ஜில் பட்டு திரும்பி பவுலருக்கே வந்தது. மொயின் அலியின் சூப்பரான கேட்சாக அது இருந்தது. 

அடுத்து களத்தில் போலார்ட்டும், க்ருணாலும் இருந்தனர். என்ன செய்தாலும் போலார்டை மட்டும் அசைக்கவே முடியவில்லை சென்னை அணியின் பவுலர்களால். 13ஆவது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார் போலார்ட். அடுத்து வந்த எங்கிடியின் பந்திலும் 2 சிக்ஸர்கள். 15ஆவது ஓவருக்கு வந்த தாக்கூரின் பந்தில் 1 சிக்ஸர் 3 பவுண்டரி என அந்த ஓவரில் 23 ரன்கள் எடுத்தார் போலார்ட். அதோடு 17 பந்தில் அவரது அரை சதத்தையும் எடுத்து விட்டார். மும்பை அணியின் ஸ்கோர் ஏறிக்கொண்டே இருந்தது. 

17ஆவது ஓவரில் சாம் கர்ரனின் பந்தில், க்ருணால் பாண்டியாவின் விக்கெட் எல்பிடபிள்யூ வில் வெளியேறியது.  18ஆவது ஓவருக்கு வந்த தாக்கூரின் பந்தில்  போலார்ட் விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டது சென்னை அணி. அழகான கேட்ச்சை தவறவிட்டார்  டூப்ளஸி. அப்போதே தெரிந்துவிட்டது மும்பை அணியின் வெற்றி. இருந்தும் 19 வது ஓவரில், ஹர்திக் பாண்டியா மற்றும் நீஷமின் விக்கெட்கள் வீழ்ந்தது சென்னை அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், எங்கிடியின் முதல் மூன்று பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்தது மும்பை அணி.  அடுத்து மூன்று பந்தில் 8 ரன்கள் வேண்டும். 4ஆவது பந்தில் தூக்கி அடித்த பந்து பவுண்டரியையும் தொடவில்லை, போலார்ட்டு சிங்கிள்ஸ் எடுக்கவும் ஓடவில்லை. அடுத்த 2 பந்தில் 8 ரன்கள் தேவை. 5ஆவது ஃபுல் டாஸ் பந்தில், ஸ்கொயர் லெக் ஏரியாவில் தூக்கி அடித்தார் போலார்ட், அசத்தலான சிக்ஸர். 

கடைசி பந்து, 1 பால், 2 ரன் தேவை. சென்னை அணியும் நம்பிக்கையோடு இருந்தது, மும்பை அணியும் நம்பிக்கையோடு இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையின் மொத்த உருவமாக நின்றிருந்தார் போலார்ட், யாக்கருக்கு சமமாக வீசப்பட்ட் கடைசி பந்தை லாங் ஆன் பக்கம் தட்டி, 2 ரன்களை ஓடி எடுத்தார்கள் குல்கர்னியும் போலார்ட்டும். அற்புதமான வெற்றி மும்பை அணிக்கு. 

முந்தைய ஆட்டங்களில் தடுமாறிய மும்பை அணிக்கு இந்த மாபெரும் வெற்றியால், அடுத்தடுத்த போட்டிகளில் தைரியமாகவே விளையாடும்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

Leave a Comment