பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய இப்ராஹிம் தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வரக்கூடிய பாஜகவின் வளர்ச்சியை தடுக்க திமுக சூழ்ச்சி செய்வதாக கூறினார்.
மேலும், பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்ட அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதை விரைவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுவோம்’’ என்று அவர் தெரிவித்தார்.
’’மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் உறுப்பினராக மட்டுமே இணைந்தார். திமுகவின் தோல்வியை மறைக்க மதன் ரவிச்சந்திரனை கைக்கூலியாக மாற்றி இந்த இழிவான செயல்களை செய்திருக்கிறார்கள்.
திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்ட வீடியோக்கள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல் அப்போது திமுக அதிமுக காட்டிக்கொண்டதாக கூறும் வேலூர் இப்ராஹிம்.
மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள சம்பந்தப்பட்ட பெண் கே. டி. ராகவனை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் ஒரு பெண் முன்னால் யாரும் திடீரென்று நிர்வாணமாக நிற்க மாட்டார்கள். கே.டி. ராகவன் பலியாடாக சிக்கியிருக்கிறார்’என கூறியுள்ளார்.