இந்தியா கிரிக்கெட் போட்டியில் சதம்போடவில்லையா? அதான் பெட்ரோல் விலையில்சதம் போட்டாச்சே.. சிதம்பரம் கிண்டல்

SHARE

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது, இதற்கு மாநில அரசுகள், அரசியல் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

அவர், உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதாகவும், கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 75 டாலர் என இருக்கும் போது ஏன் இந்த நிலை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரை தாண்டியது என்றும், ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயை தாண்டவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ள ப.சிதம்பரம், இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை என கடுமையாக சாடியுள்ளார்.

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது என்றும், மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள்தோறும் அனுபவித்து வருவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

தலைவரும் நானே… பொதுச் செயலாளரும் நானே… மநீம கட்சியில் மாற்றங்களை அறிவித்த கமல்!

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

Admin

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

Leave a Comment