போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

SHARE

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரிய எச்.ராஜா மனுவை விசாரித்த ஐகோர்ட், வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்துச் செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த பதிவை பதிவிட்டது நீங்களா என எச். ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தது தாம் தான் என்று எச்.ராஜா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

எச்.ராஜாவின் இந்த பதிலைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

திமுகவில் டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!

Admin

Leave a Comment