தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

SHARE

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மே மாதம் 30 ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

கெபிராஜின் பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் பயன்படுத்திய பயன்படுத்திய கணினியின் சி.பி.யூ, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கெபிராஜால் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கலாம் எனக்கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் 9498143691என்ற தொலைபேசி எண்ணும், atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு வாழ் பெண் ஒருவர் பயிற்சியாளர் கெபிராஜ் மீது இணைய வழியில் தானும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கும் பயிற்சியின்போது கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜ் மீது மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும், புகார் அளித்த பெண் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

Leave a Comment