பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

SHARE

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

–> 50 % மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்

–> வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர வேண்டும்

–> ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும்

–> வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

–> வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்

–> பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தக் கூடாது

–> ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

–> விளையாட்டு, இறைவணக்கக் கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது

–> கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை திறக்கக் கூடாது

–> பெற்றோர்கள் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது
–> திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமாக பள்ளியில் இருக்க வேண்டும்

–> அறிகுறி உள்ள மாணவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக தனி அறை வசதி இருக்க வேண்டும்

–> பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

Nagappan

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

Leave a Comment