Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

SHARE

முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, தனது உணர்ச்சிப்பூர்வமான உரையால் கண்கலங்க வைத்துள்ள இவரது வீடியோக்கள்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங். வீச்சுமிகு உரைகள், மத நல்லிணக்கத்தின் அடையாளம் என சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ட்ரெண்டில் இருக்கும் இந்த முபாரக் யார்?  

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல். இங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகமது முபாரக். 2009ஆம் ஆண்டு முதல் நேரடியான கள அரசியல் செய்து வரும் இவர், சிறுபான்மை மக்களுக்கான அழுத்தமான போராளியாக அறியப்பட்டவர்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை தனது ஊரிலேயே முடித்து MS பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில் நிர்வாகப் படிப்பில் தேர்ச்சி பெற்றார்.  பின்னர், முதுகலை அரசியல் அறிவியலும் படித்தார். 

கல்லூரி காலம் முதலே சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ள மாணவனாகவே இருந்துள்ளார் முபாரக். இந்தியாவிலேயே அதிகமான சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதியில் பிறந்து அம்மக்களின் சிக்கல்களை நேரடியாக பார்த்து வளர்ந்த முபாரக்குக்கு, சிறுபான்மை சமூக பிரச்னைகளில் மட்டுமன்றி எளிய மக்களின் உரிமை சார் பிரச்னைகளிலும் அதிக கவனம் இருந்தது. அத்துடன் சூழலியல் சார்ந்த பல்வேறு போராட்டங்களை படிக்கும் காலத்திலேயே முன்னெடுத்தார். 

“கூட்டணி அமைத்திருக்கிறோம் என்பதற்காக அவர்களது திட்டங்களை எதிர்க்க மாட்டோம் என்றில்லை. கூட்டணியை விட மக்கள் நலன் முக்கியம் ” என்ற இவரது முழக்கம் பொதுவெளியில் இவரை தலைவர்கள் மத்தியில் தனித்துவமாகக் காட்டியது. 

2009ஆம் ஆண்டு SDPI கட்சி தொடங்கப்பட்டபோது தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார். 8 ஆண்டுகளுக்குப்பிறகு, துணைத்தலைவராக 2 ஆண்டுகாலம் இருந்த இவரை, பின்னர் தலைவராக்கியது எஸ்டிபிஐ.

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடும் இவரது பேச்சுகளும் அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

படித்த, சமூகப் பொறுப்பும் அக்கறையுமுள்ள வேட்பாளர் என்று சமூக ஊடகங்களில் கிடைக்கும் வரவேற்பு வாக்குகளாக மாறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

Leave a Comment