ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

SHARE

ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும்.

இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

Leave a Comment