ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

SHARE

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார்.

”நான் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியின் தொடர்பிலிருந்தவள். தற்போதுவரை நான் எந்தக் கட்சிக்கும் மாறியதில்லை. இதுதான் முதல்முறையாகக் கட்சி மாறியிருக்கிறேன். தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான செயல்பாடுகள், திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் என்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டேன். மேலும், பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச அளவில் இந்தியா மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையின் மூலம் கட்சியைச் சிறப்பாக வளர்த்து வருகிறார்.

பா.ஜ.க-வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன் இணைந்து பா.ஜ.க-வை வளப்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமை இந்திய நாட்டுக்கு முக்கியமானது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு பெண்கள் வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் இருக்கிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தேன். சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அது மறுக்கப்பட்டது. தற்போது கூட சட்டமன்றத் தலைவராக என்னை விட ஜூனியருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.


இது போன்ற அதிருப்தி நீண்டகாலமாகவே இருந்திருக்கிறது. 1999 முதல் எம்.பி தேர்தலில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சென்ற தேர்தலில் எம்.எல்.ஏ – எம்.பி தேர்தல் சேர்ந்து வந்தபோதுகூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் பல்வேறு பணிகள் அப்படியே இருக்கிறது. அதை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளவே இல்லை. என்னைப் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராவது என்னை இணைத்துக்கொண்ட கட்சி எடுக்க வேண்டிய முடிவு. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Admin

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

நாங்க காந்தியா இருக்கணுமா ? சுபாஷ் சந்திரபோஸா இருக்கணுமா : பிரேமலதா ஆக்ரோஷம்!

Admin

Leave a Comment