காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

SHARE

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி , சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

வடசென்னை பகுதியை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். அதன் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையுள்ள கடற்பகுதியை அழகுபடுத்த முடிவு செய்து பல்வேறு பிரிவுகளாக பணிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி ₹5.5 கோடி செலவில் சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் 3 மீட்டரில் நடைபாதையும், அரை மீட்டரில் சாலையோர பூங்காவும் நடைபெற உள்ளது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் இன்று  நடைபெற்றது.

இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மற்றும் திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Pamban Mu Prasanth

கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

Leave a Comment