“நீ வேணா சண்டைக்கு வா” … அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்..

SHARE

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை குத்து சண்டை வீரர் அண்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘கில்லாடியோன் கா கில்லாடி’ படத்தில் பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அண்டர்டேகருடன் நடிகர் அக்‌ஷய் குமார் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

அண்டர்டேகர் வேடத்தில் நடித்திருந்த நடிகரை அக்‌ஷய் குமார் அடிக்கும் அந்தக் காட்சிக்கு படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவுகூறும் விதமாக ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், அண்டர்டேகரை இதுவரை வீழ்த்தியவர்கள் என்கிற பட்டியலில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச் ஆகியோருடன் அக்‌ஷய் குமார் புகைப்படத்தை இணைத்து உருவாக்கியிருந்த ஒரு மீம்ஸ் வைரலானது.

இதனை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அப்பதிவைக்கண்ட அண்டர்டேக்கர், “உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என அக்‌ஷய் குமாரிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அக்‌ஷய் குமார், என்னுடைய ஆயுள் காப்பீட்டை சரி பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Admin

வெளியாகும் புத்தகம்: கலக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை

Admin

மொட்டை போடுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment